Connect with us
 

News

ஒரே புகைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் வசம் ஈர்த்த அபர்ணாதாஸ் !

Published

on

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட்.

தற்போது இப்படதின் படப்பிடிப்பு படு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பீஸ்ட் படப்பிடிப்பு ஆரம்பித்து 100 நாட்கள் ஆகிவிட்டது என நேற்று இயக்குநர் நெல்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு அதனுடன் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், நெல்சன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.

இந்த புகைப்படத்தில் அனைவருமே இசை சம்மந்தப்பட்ட ஒரு ரியாக்‌ஷனை செய்து கொண்டி இருப்பது போல் இருந்தனர் இதனால் விரைவில் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வெளியாகப்போகிறது என்று ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் அந்த புகைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே விட அபர்ணா தாஸ்ஆ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த புகைப்படத்தில் கீபோர்டு வாசிப்பது போல் அபர்ணாதாஸ் மிகவும் அழகாக இருக்கிறார். இதனால் யாருப்பா இந்த நடிகை என்று அவரை சமூக வலைதளங்களில் பலரும் தேடி அவரின் புகைப்படங்களை பார்த்து வருகின்றனர்.

அபர்ணாதாஸ் மலையாளத்தில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்த நிலையில் பீஸ்ட் படத்தில் அவர் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சில இவர் இப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்துள்ளார் என்றும் கூறுகின்றனர் படம் வெளிவந்தால் இதற்கு சரியான பதில் கிடைத்துவிடும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.