Connect with us
 

News

அருண் விஜய் நடிக்கும் மிஷன் சேப்டர் -1 ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Published

on

இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், ஏமி ஜாக்சன், மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் மிஷன் சேப்டர் – 1. இப்படத்திற்கு முன்னதாக அச்சம் என்பது இல்லையே என தலைப்பு வைக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டது.

லைலா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படம் முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான இப்படத்தின் டீஸர் நல்ல வரவேற்பை பெற்றது ரசிகர்கள் மத்தியில்.

அருண் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான சில படங்கள் சரியான வெற்றியை அவருக்கு கொடுக்கவில்லை. இப்படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது.

இந்த நிலையில் இப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.