News
இது வரை இல்லாத அளாவுக்கு வியாபாரம் செய்த ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை !

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யாவுடன் நடிகை துஷாரா, கலையரசன், பசுபதி சந்தோஷ் என பலர் நடித்துள்ளனர். 1980-ஆம் ஆண்டுகளில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் குத்துச்சண்டையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து திரையரங்குகளில் மூடப்பட்டுள்ள நிலையில் இம்மாதம் 22-ந் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
இந்நிலையில் இந்த படம் ஆர்யாவின் திரை பயணத்தில் அதிக விலைக்கு வியாபாரம் செய்யப்பட்ட திரைப்படமாம். இதுவரை மொத்தமாக இந்த திரைப்படம் ரூபாய் 50 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் 31 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.