Connect with us
 

News

வெளியானது சூர்யாவின் வாடிவாசல் டைட்டில் லுக் போஸ்டர் !

Published

on

அசுரன் படத்திற்கு பின்னர் வெற்றிமாறன் சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

சூர்யா தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பின்னர் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் வாடிவாசல் படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகும் என்று நேற்று அறிவிப்பு வெளியானது. அதன் இன்று மாலை 5 மணிக்கு வாடிவாசல் பற்றிய அப்டேட் வெளியானது.

அதன் படி தயாரிப்பாளர் தாணு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நம் வீரத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை உங்கள் பார்வைக்கு வெளியிடுவதை பேரின்பமும் பெருமையும் கொள்கிறேன் என்று டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.