Connect with us
 

News

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் பிக்பாஸ் ஷிவானி நாராயணன் !

Published

on

ரேடியோ அறிவிப்பாளராக இருந்து பின்னர் திரைப்படங்களில் காமெடி நடிகராக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக எல்.கே.ஜி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆர்.ஜே.பாலாஜி. இப்படத்தையடுத்து நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கி நடித்தார்.

இந்த நிலையில் விரைவில் இவரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கவுள்ளாராம். இந்த படத்தில் நாயகியாக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சின்னத்திரை நடிகை ஷிவானி நாரயணன் நடிக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார் ஷிவானி நாராயணன். இதனையடுத்து பொன்ராம் இயக்கும் புதிய படத்திலும் நடிக்கவுள்ளாராம்.