இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பொம்மை.ஹாலிவுட்டில் வெளியான மானிகுயின் படத்தின் ரீமேக் இப்படம் என்று ஒரு சர்ச்சை வேறு இப்படத்திற்கு உள்ளது.
சிறு வயதில் தன் பக்கத்து வீட்டு தோழியை தொலைத்து விடுகிறார் எஸ்.ஜே.சூர்யா இதன் காரணமாக மனதளவில் பெரும் பாதிப்பு இருக்கிறது. ஓவிய திரமை இவருக்கு உள்ளதால் ஜவுளிக்கடை பொம்மைகள் செய்யும் ஒரு கம்பெனியில் பொன்மைகளை கலை நயத்துடன் உருவாக்கும் சேலை செய்து வருகிறார். ஒரு நாள் எஸ்.ஜே.சூர்யா சிறு வயது தோழி கன்னத்தில் பெரிய மச்சம் இருக்கும் அப்படி ஒரு பொம்மை அவரிடம் வருகிறது. அதை முழுமையாக வடிவமைத்து பார்த்தபின் அந்த பொம்மையிடம் மனதைப் பறி கொடுக்கிறார். அந்த உயிரில்லா பொம்மை இவருக்கு மட்டும் உயிர் உள்ள பொம்மை போல தெரிகிறது. உயிர் பெற்று வந்த அந்த பொம்மையாக பிரியா பவானி சங்கர். கம்பெனி சூப்பர்வைசர் அந்த பொம்மையை ஒரு கடைக்கு விற்றுவிடுகிறார். அதனால் கோபடையும் எஸ்.ஜே.சூர்யா அந்த சூப்பர்வைசரை கொலை செய்து விடுகிறார். பொம்மை இருக்கும் அந்த கடைக்கு சென்று அங்கு வேலைக்கு சேர்கிறார். அதன் பின்னர் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் பெயருக்கு ஏற்ற போல படம் பார்க்கும் ரசிகர்களும் அந்த பொம்மை போலவே இருக்க வைக்கிறது. படத்தில் வரும் ஒரு காட்சி கூட சுவாரஸ்சத்தை நமக்கு கொடுக்கவில்லை. படத்தின் ஒட்டு மொத்த ரன்னிங் டைம் இரண்டரை மணி நேரம் அதில் இரண்டு மணி நேரம் எஸ்.ஜே.சூர்யா – பிரியா பவானி சங்கர் இருவருமே பேசி நம்மை கொலையாக கொள்கிறார்கள். எப்படி பட்ட நடிகர் தான் என்பதை மாநாடு படத்தின் மூலம் நமக்கு காட்டியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா ஆனால் இப்படத்தில் இவரின் நடிப்புக்கு எந்த ஒரு காட்சி கூட இல்லை.
ஒரு கதாப்பாத்திரம் நம் மனதை தொட வேண்டும் என்றால் அந்த கதாப்பாத்திரம் மேல் நமக்கு அனுதாபம் வரவேண்டும் முதலில் இதில் எஸ்.ஜே.சூர்யா மீது நமக்கு ஒன்று வரவேயில்லை.
தன் கதாப்பாத்திரம் க்யூட் யாக இருக்க வேண்டும் என்பதற்கு பல முகபாவனைகள் செய்து அந்த க்யூட்டை வர வரைக்க முயற்சி செய்கிறார் பிரியா பவானி சங்கர் ஆனால் அப்படி ஒன்றுமே வரவில்லை.
எஸ்.ஜே.சூர்யாவை காதலிக்கும் சாந்தினி. எஸ்.ஜே.சூர்யா கடையில் போய் வேலை செய்ய ஒரு லாஜிக் வேண்டும் அதற்கு இந்த கதாப்பாத்திரம் வைத்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா எப்படியாவது பாடல்கள் அனைத்தையும் ஹிட்டாக கொடுக்க கடுமையாக உழைத்துள்ளார். ஆனாலும் முத்தம் முதல் முத்தல் பாடல் மட்டுமே கேட்கும் ரகம். பின்னணி இசை பல இடங்களில் படத்தை நன்றாக காப்பற்றி விடுகிறது.
மொழி, அபியும் நானும், போன்ற படங்களை கொடுத்த ராதா மோகன் மாநாடு படத்தில் நடிப்பில் மிரட்டிய எஸ்.ஜே.சூர்யா இருவரும் இணையும் போது படத்தின் மேல் பயங்கரமான எதிர்பார்ப்பு இருந்தது அதை நம்பி படம் பார்க்க போன ரசிகர்கள் ஏமாற்றம் மட்டுமே கிடைக்கும்.
Bommai Review By CineTime
[wp-review id=”46211″]