Connect with us
 

Reviews

எல் ஜி எம் – விமர்சனம்

Published

on

Cast : HARISH KALYAN, IVANA, NADIYA, YOGI BABU, RJ VIJAY, DEEPA SANKAR,
Production : DHONI ENTERTAINMENT, DELTA STUDIOS
Director: RAMESH THAMILMANI
Screenplay: RAMESH THAMILMANI
Cinematography : VISWAJITH ODUKKATHIL
Editing : PRADEEP E RAGAV
Music : RAMESH THAMILMANI
Language : TAMIL
Runtime : 2H : 32 Mins
Release Date :28 July, 2023

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்னாள் கேப்டனுமான தோனி சினிமா துறையில் கால் வைத்து தயாரிக்கும் முதல் திரைப்படம் இந்த எல் ஜி எம். தான் தயாரிக்கும் முதல் திரைப்படம் கண்டிப்பாக தமிழ் படமாகவே இருக்க வேண்டும் என்று நினைத்து இந்த படத்தை தயாரித்துள்ளார்.

படத்தின் நாயகனான ஹரிஷ் கல்யாண் ஒரு ஜ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் பணி புரியும் இவானாவை காதலிக்கிறார். இரு வீட்டிலும் காதலை ஒப்புக்கொண்டு பேச்சி வார்த்தை நடைபெறும் போது திருமணம் ஆன பின்னர் ஹரிஷ் கல்யாண் அம்மாவான நதியா எங்களுடன் இருக்க கூடாது என இவானா சொல்ல அந்த திருமணம் நின்று போகிறது.

காரணம் மாமியாருடன் இருப்பது இவானாவுக்கு பிடிக்கவில்லை என்பதுதான் அதனால் ஹரிஷ் கல்யாண் குடும்பம் நண்பர்கள் மற்றும் இவானா குடும்பம் சேர்ந்து ஒரு சுற்றுலா செல்ல திட்டமிடுகிறார்கள். அப்பிடி போய் நதியாவுடன் பழகி பார்த்து விட்டு ஓகே என்றால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூடுகிறார். இந்த உண்மையை நதியாவிடம் சொல்லாமல் பொய் சொல்லி அந்த சுற்றுலாவுக்கு நதியாவை அழைத்து செல்கிறார் ஹரிஷ் கல்யாண். அங்கு சென்ற இடத்தில் உண்மை நதியாவுக்கு தெரிய வர அந்த சுற்றுலாவை கேன்சல் செய்கிறார்கள். இவர்களை அனைவரையும் ஊருக்கு அனுப்பு விட்டு நதியா மற்றும் இவானா இருவரும் தனியாக பிரிந்து செல்கிறார்கள் அதன் பின்னர் என்ன ஆனது திருமணம் நடந்ததா இல்லையா என்பது படத்தின் மீதிக்கதை.

படத்தின் முதல் பாதி காமெடி காதல் குடும்பம் அம்மா – மகன் பாசம் என கலகலப்பாக நடர்கிறது. முதல் பாதியில் வரும் டுவிஸ்ட் என ரயில் வேகத்தில் நகர்கிறது.

ஹரிஷ் கல்யாண் அம்மா – காதலி இவானா இருவருக்கும் இடைதில் சிக்கி கொண்டு தவிக்கும் இளைஞராக சிறப்பாக நடைத்துள்ளார். இவான இந்த காலத்து பெண்ணாக சிறப்பாக நடித்துள்ளார். அதிலும் மாமியாருடன் ஒரே வீட்டில் வாழ எனக்கு விருப்பம் இல்லை என கூறும் இடத்திலும் அதற்கு அவர் கூறும் காரணங்களும் கொஞ்சம் ஏற்றுக்கொள்ளும் படியாகத்தான் இருக்கிறது.

அம்மாவாக வரும் நதியா இந்த கதாப்பாத்திரத்துக்கு இவர்தான் சரியான தேர்வு என்று நாம் நினைத்தாலும் இவரின் தோற்றம் கொஞ்சம் நெருடலாக உள்ளது. கண்களின் கீழே வரும் அதிக சுருக்கம் இவரின் கதாப்பாத்திரத்தை கெடுத்து விடுகிறது. இடைவேலை வரை அம்மா நதியாவாகவும் இடைவேலைக்கு பின்னர் கோவா சென்ற பின்னர் 90களில் பார்த்த நதியாவாக மாறி வரும் காட்சிகளிலும் அசத்தியுள்ளா.

யோகி பாபு 10 நிமிடம் மட்டும் வந்து திடிரென காணாமல் போய் விடுகிறார். ஏதோ கால் சீட் பிரச்சனையாம். எவ்வளவு காமெடி செய்தாலும் கொஞ்சம் கூட சிரிப்பே வராமல் காமெடி செய்யும் நண்பனாக ஹரிஷ் கல்யாண் நண்பன் ஆர்.ஜே.விஜய் ஒரு சில இடங்களில் மட்டும் நம்மை சிரிக்க வைக்கிறார்.

படத்தின் இசை மற்றும் பின்னணி இசை சுமார் ரகம். கதை அழுத்தமாக இருந்தால்தான் இசையும் அப்படியே வரும். ஒளிப்பதிவாளர் விஸ்வஜித்தின் ஒளிப்பதிவு சுமார் ரகம்தான்.

படத்தின் முதல் பாதி முழுவரும் நன்றாக கலகலப்பாக ரசிக்க முடிகிறது. அதன் பின்னர் படம் எங்கு எதை நோக்கி செல்கிறது என்று நம்மால் யூகிக்கவே முடியாமல் போய் நம்மை சலிப்படைய செய்கிறது.

வீடியோ விமர்சனம் :