Connect with us
 

News

விஜய் தங்கையாக நடிக்கும் நடிகை இவானா !

Published

on

லியோ படத்தை அடுத்து தளபதி விஜய் தனது 68 படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், அஜ்மல், யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிகாவில் நடைபெறும். ஒரு பொழுது போக்கு படமாக உருவாகி வரும் இப்படத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிகர்களும் ரசிக்கும் ஒரு ஜாலியான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் இது ஒரு டைம் ட்ராவல் படம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் இப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடிக்க நடிகை இவானா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவானா நடிப்பில் வெளியான லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.