Connect with us
 

News

லியோ படத்தின் வெற்றி விழாவுக்கு தயாராகும் நேரு ஸ்டேடியம் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் லியோ. அனிருத் இசையமைத்த இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா என பலர் நடித்திருந்தனர். வெளியான ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 450+ கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது லியோ.

ஆனால் லியோ படம் வெளியாகும் முன்னதாக ஆடியோ வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டு பின்னர் பல்வேறு சூழல்களால் நடத்த முடியாமல் போனது. அது விஜய் ரசிகர்களுக்கு இன்றும் வருத்தத்திற்கு உரிய ஒன்றாகவே உள்ளது. இந்நிலையில் ஆடியோ வெளியீட்டை நடத்த முடியாமல் போனாலும், லியோ படத்தின் வெற்றியை கொண்டாடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

இந்த வெற்றி விழாவை நவம்பர் 1-ம் தேதி கொண்டாட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த விழாவை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இதை நடந்தவுள்ளனர். இதில் விஜய் பங்கேற்பதாக கூறப்படுகிறது. அதனால் இதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி தயாரிப்பு தரப்பில் போலீஸில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.