Connect with us
 

Reviews

பபூன் – திரைவிமர்சனம்

Published

on

Movie Details

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உதவி இயக்குநர் அஷோக் வீரப்பன் இயக்கத்தில் நடிகர் பைபவ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பபூன்.

காரைக்குடியில் நாடகம் நடத்தி அதில் நின்மதியாக வாழ்ந்து வருகிறார்கள் பைபவ் அவரின் நண்பர் முத்தையா. இந்த நாடகத்தை நம்பி இனி இங்கு பிழைக்க முடியாது யாரும் நமக்கு மரியாதை தரமாட்டாங்கிறான் என்று நினைத்து வெறுத்து வெளிநாடு போகலாம் என இருவரும் முடிவெடுக்கிறார்கள்.

வெளிநாடு செல்ல 1 லட்சம் தேவை என்பதால் இருவரும் லாரி டிரைவர்களாக வேலைக்கு சேர்கிறார்கள். இவர்கள் கடந்த 20 வருடமாக போதை பொருள் கடத்தி போலீஸ் அதிகாரிகளுக்கே தண்ணி காட்டி வரும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் தனபாலன் கீழ் வேலைக்கு சேர்கிறார்கள்.

இவர்களுக்கு தெரியாது அது கடத்தல் மன்னன் தனபாலன் இடம் என்று இவர்களின் வேலை உப்பு டெலிவரி செய்வது சொன்ன இடத்தில் லாரி முழுவதும் இருக்கும் உப்பை கொண்டு போய் சேர்த்து விட்டு வருவது. அப்படி இவர்கள் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே இவர்களுக்கு ஒரு லாரி முழுவதும் உப்பு ஏற்றி அதை ஒரு இடத்தில் கொண்டு விடுமாறு உத்தரவு வருகிறது. ஆனால் அந்த லாரிக்குள் உப்புடன் போதை பொருளும் இருக்கிறது. இது இவர்களுக்கு தெரியாமல் போக போகும் வழியில் போலீஸ் இவர்களை மடக்கி பிடித்து விடுகிறது. பின்னர் போலீஸ் கொண்டு செல்லும் வழியில் போலீஸ் அதிகாரியை சுட்டு விட்டு தப்பித்து செல்கிறார்கள் இருவரும் அதன் பின்னர் இவர்கள் என்ன ஆனார்கள் உண்மையில் யார் அந்த தனபால்? என்பதை கண்டு பிடித்து இந்த வழக்கில் இருந்து இருவரும் வெளிவருவதுதான் படத்தின் மீதிக்கதை.

பைபவ் அவரின் இயல்பான நடிப்பை வெளிப்படித்தியுள்ளார். ஆனாலும் இன்னும் இவர் நடிப்பில் தேறவேண்டுமோ என்ற எண்ணம் வருகிறது. பைபவ் நண்பனாக வரும் ஆத்தங்குடி இளையராஜா கவனம் ஈர்க்கும் நடிப்பு ரசிக்க வைக்கிறார்.

படத்தின் நாயகி இலங்கை அகதியாக வரும் அனகா இலங்கை அகதி மக்களின் வலியையும் இந்திய நாட்டின் சட்டத்தையும், பைபவ் மேல் வரும் காதலின் வெளிப்பாட்டையும் மிக அழகாக வெளிப்படித்தியுள்ளார்.

சிறப்பு தோற்றத்தில் வரும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் அவரின் அனுபவ நடிப்பை காட்டியுள்ளார். படத்தில் வரும் பல கதாப்பாத்திரங்கள் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளது.

படத்தின் முதல் பாதியில் குமரன் வாழ்க்கை இலங்கை அகதிகளின் வலி என அனைத்தையும் மிக ஆழமாக நம் மனதில் பதிய வைத்த அறிமுக இயக்குநர் அசோக் வீரப்பன். இரண்டாம் பாதியில் கொஞ்சம் கோட்டை விட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். பிரச்சனையில் மாட்டிக்கொள்ளும் பைபவ் எப்படி அதை கடந்து வந்தார் என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாகவும் ரசிகர்களும் புரியும் படி சொல்லியிருக்கலாம்.

தினேஷ் புருஷோத்தன் ஒளிப்பதிவு இராமஸ்வரத்தின் அழகை மிகவும் நேர்த்தியாக காட்டியுள்ளார். சந்தோஷ் நாயாரணனின் இசை பிண்ணனி இசை சுமார் ரகம்.

கண்டிப்பாக ஒரு நல்ல த்ரில்லர் படமாக இருந்தாலும் இலங்கை மக்களின் வலியையும் நாடக கலைஞர்களின் வலியையும் இன்னும் அழுத்தமாக சொல்லியிருந்தால் இந்த ‘பபூன்’ நன்றாக பேசப்பட்டிருக்கும்.
Buffoon Review By CineTimee

[wp-review id=”44089″]