ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் பெண்கள் மர்மான முறையில் இறந்து போக அவர்களை புலி அடித்து கொலை செய்கிறது என அனைவரும் சொல்ல அதே கல்லூரியில் படிக்கும் படத்தின் நாயகன் அருள்நிதி தனது நண்பர்களுடன் சேர்ந்து உண்மையில் அங்கு இருக்கும் மர்மத்தை கண்டுப்பிடிப்பதே இந்த திரைப்படம் D Block.
நான்கு பங்களும் காடு நடுவில் அமைந்திருக்கும் ஒரு கல்லூரி அந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்புக்காக சேர்கிறார் நாயகன் அருள்நிதி. 6 மணிக்கு மேல் அங்குள்ள மாணவ மாணவிகள் யாரும் தங்கும் அறைகளை விட்டு வெளியிலும் சரி மொட்டை மாடிக்கும் சரி வர கூடாது என்று கல்லூரி நிர்வாகம் ஒரு கட்டுப்பாட்டை போட்டு வைத்துள்ளது.
இப்படி இருக்க அருள்நிதி வகுப்புல் படிக்கும் தோழிகளான ஒருவர் ஸ்வாதி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரின் உடலில் சில அடிபட்ட காயங்கள் இருந்தாலும் புலி அடித்து கொலை செய்து விட்டது என்று தங்களுக்கு பிரச்சனை வரக்கூடாது என்பதற்கான மூடி மறைக்கிறது கல்லூரி நிர்வாகம்.
தன் நெருங்கிய தோழியின் மரணத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று நினைக்கும் அருள்நிதி நண்பர்களின் உதவியுடன் அதை கண்டுபிடிக்க முயல்கிறார். அந்த மரணத்திற்கான உண்மை காரணம் என்ன? கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனான அருள்நிதி தொடர்ந்து இது போன்ற படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ஆனால் இவரின் முந்தைய படங்களில் இருந்த அந்த த்ரில்லர் இப்படத்தில் இல்லை என்பதுதான் உண்மை அது சற்று ஏமாற்றம். ஒரு சிறப்பான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி சிறப்பான படங்களை தேர்வு செய்து நடித்தால் நல்லது.
படத்தின் நாயகியான அவந்திகா மிஸ்ரா தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தில் இவரின் பங்களிப்பு முக்கியம். அருள்நிதியுடனான காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறது.
யூடியூப் பிரபலம் எருமை சாணி விஜய்குமார் தனது முதல் படத்தை எடுத்து இயக்குநராக அறிமுகமாகிறார் அதற்கு வாழ்த்துக்கள். படத்தின் முதல் பாதி எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமல் சென்று ஒரு வழியாக இடைவேலை வருகிறது.
முதல் பாதியில் மறைக்கப்பட்ட மர்மத்தின் முடிச்சுகள் இரண்டாம் பாதியில் கட்டவிழும் போது அதில் ஈர்ப்பு குறைவாக உள்ளது. படத்தின் கதை நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் அழுத்தம் இல்லாத காரணத்தால் த்ரில்லர் படத்திற்கான அந்த விறுவிறுப்பும் சுவாரஸ்சியமும் குறைவாக இருக்கிறது.
படத்தின் முதல் பாதியில் எந்த வித த்ரில்லர் இல்லாமலும் இரண்டாம் பாதியில் அந்த மர்மத்தை படம் பார்க்கும் ரசிகர்கள் எளிதாக கண்டுபிடித்து விடுவதும் படத்தின் மிகப்பெரிய மைனஸ். ஆனாலும் சில இடங்களில் கண்டிப்பாக விறுவிறுப்பும் சுவாரஸ்சியமும் படத்தை முழுவதுமாக சலிக்காமல் நம்மை பார்துக்கொள்கிறது.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் பல இடங்களில் நம்மை மிரள வைக்கிறார். குறிப்பாக அந்த காட்டுப்பகுதியை மிரட்டளாக காட்டியுள்ளார். ரோன் ஈத்தன் யோகனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.
திரில்லர் படமாக இருந்த போதிலும் விறுவிறுப்பு குறைவாக இருப்பதாகவும், அருள்நிதியின் முந்தைய படங்களை காட்டிலும் இதில் சுவாரஸ்யம் குறைவாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர். விமர்சனம் மற்றும் வரவேற்பை பொறுத்தவரை மிதமான வெற்றியை கொண்டுள்ளது டி. பிளாக்.
DBlock Movie Review By Cinetimee
[wp-review id=”43053″]