Connect with us
 

News

டி.இமான் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளார் !

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி தொடர்களுக்கு இசையமத்த டி.இமான் காதலே சுவாசம் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். இவரின் கெட்ட நேரம் இந்த படம் வெளியாகவில்லை. அதன் பின்னர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்திற்கு இசையமைக்க தொடங்கிய இவர் இன்று வரையில் 100 படத்துக்கு மேல் இசையத்துள்ளார்.

விஜய், ரஜினி, அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதை தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி படங்களுக்கு இசையமைத்துள்ளார். விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த இவருக்கு சிறந்த இசையமைப்பாளரருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

டி.இமான் கடந்த 2008-ம் ஆண்டு மோனிகா ரிச்சர்டு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். தற்போது இவர்கள் இவரும் விவாகரத்து செய்துள்ளனர்.

இது பற்று டி.இமான் கூறுகையில் வாழ்க்கை என்பது பல்வேரு பாதைகளை கொண்டது என்பதை நானும் எனது மனைவியும் புரிந்து கொண்டோம். நாங்கள் இருவரும் கடந்த 2020 நவம்பர் மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள் கணவன் மனைவி கிடையாது. எங்களின் இந்த தனிப்பட்ட முடிவுக்கு மதிப்பளித்த எங்களது அடுத்தக்கட்ட வாழ்விற்கு செல்லும் வகையில் ஒத்துழைப்பு தரவேண்டும் என அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என டி.இமான் கூறியுள்ளார்.