Trailer
வெளியானது மிரட்டலான டிமான்டி காலனி 2 ட்ரைலர் !

நடிகர் அருள்நிதி, இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் வெளியான “டிமான்டி காலனி” திரைப்படம் ரசிகர்களை உறைய வைக்கும் திகில் படமாக இருந்தது. டிமான்டி காலனி மூலம் அறிமுகமான திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து, இமைக்கா நொடிகள் மற்றும் விரைவில் வரவிருக்கும் ‘கோப்ரா’ போன்ற பெரிய படங்களை இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த படத்தின் 2ம் பாகம் உருவாகும் என இப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்திருந்தார். அதன்படி, தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘டிமான்டி காலனி 2’ உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் முத்துக்குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஸ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், ‘டிமான்டி காலனி 2’ திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியுடன் கூடிய ட்ரைலர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரெய்லரை பார்ப்பதற்கே மிரட்டலாகவும் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.