News
பிப்ரவரி 8 வெளியாகும் தனுஷ் நடிக்கும் வாத்தி டிரைலர் !

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாத்தி. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகவுள்ளது.தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. தனுஷ் உற்பட படத்தின் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இன்று வாத்தி படத்தின் டிரைலர் வெளியீட்டு போஸ்டரை படக்குழு அறிவித்தது. அதன் படி பிப்ரவரி 8-ம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.