Connect with us
 

Reviews

டைரி – விமர்சனம் !

Published

on

Movie Details

இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் ஒரு த்ரில்லர் க்ரைம் படமாக இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் Diary.

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கோர விபத்துடன் படம் ஆரம்பமாகிறது. சப் இன்ஸ்பெக்டர் போலீஸ் பயிற்சை முடிக்கும் இறுதி கட்டத்தில் இருக்கிறார். அதே சமயம் அங்குள்ள க்ரைம் கேஸ்களில் முடிக்க முடியாத ஒரு வழக்கை நீங்கள் எடுத்து அதை விசாரிக்கலாம் என்று கூறுகிறார் அஜய் ரெத்னம்.

தன் கண்களை மூடிக்கொண்டு அலுமாரியில் உள்ள ஒரு கேஸைத் தேர்வு செய்கிறார் அருள் நிதி. அது ஊட்டியில் 16 வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு நகை கொள்ளை கொலை வழக்கு. ஊட்டிக்கு சென்று தன் விசாரணையை ஆரம்பிக்கிறார் அருள் நிதி. இந்த வழக்கை விசாரிக்க போகும் அருள் நிதிக்கு அங்கு பல மர்மங்கள் காத்திருக்கிறது என்று தெரியாமல் போகிறது. அப்படி போகும் அவருக்கு ஒரு மிகப்பெரிய உண்மை தெரிகிறது அது என்ன உண்மை என்ன மர்மங்கள் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

தான் நாயகனாக இருக்க வேண்டும் என்பதை விட கதைக்கு நான் நாயகனாக இருக்க வேண்டும் என்று நினைத்து தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். கண்டிப்பாக இப்படத்தை அந்த வரிசையில்தான் தேர்வு செய்துள்ளார். படத்தின் முதல் மாதி முழுவதும் கதையும் த்ரில்லர் பகுதிகளும்தான் நம்மை கொண்டு செல்கிறது. படத்தின் இரண்டாம் பாதியிலிருந்துதான் அருள் நிதியின் வேட்டை ஆரம்பமாகிறது. அந்த அளவிற்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

படத்தின் நாயகியாக சில நிமிடங்கள் மட்டுமே வரும் பவித்ரா மாரிமுத்து. ஊட்டி போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக சிறப்பாக நடித்துள்ளார். இவரின் அறிமுக காட்சியிலேயே நம்மை வியக்க வைக்கிறார். அருள் நிதிக்கு ஜோடியும் இவர்தான்.

ஊட்டியிலிருந்து கோயம்பத்தூர் செல்லும் ஒரு அரசாங்க பேருந்து அதில் நடக்கும் சம்பவமே படத்தின் மையக்கதை. ஒரு குழப்பமான கதையை மிக அழகாக திரைக்கதையில் அனைவருக்கும் புரியும்படி சொல்லியது சிறப்பு. ஆனாலும் ஆரம்பத்தில் பேய் என்று நமக்கு காட்டுகிறார் இயக்குநர். இடைவேளையில் கூட அப்படித்தான் காட்டுகிறார். அப்படி என்றால் அந்த பேய்கள் யார்? எங்கே போனது என்ற கேள்வி வருகிறது. அதற்கு இயக்குநர்தான் பதில் கூற வேண்டும்.

அந்த பேருந்துக்குள் சில பல கதாப்பாத்திரங்கள் வருகிறார்கள். அதில் ஷாராவும் வருகிறார். சில இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார். பல இடங்களில் இரட்டை அர்த்தம் கொண்ட நகைச்சுசையில் நம்மை முகம் சுளிக்க வைக்கிறார்.

போலீஸ் வாகன ஓட்டியாக வரும் சாம்ஸ், ஊட்டி எம்.எல்.ஏ கதாப்பாத்திரத்தில் வரும் ஜெயப்பிரகாஷ், கிஷோர் இவர்களை தவிர அனைவருமே பார்க்காத முகங்கள் நமக்கு.

படத்தில் கதை திரைக்கதை எந்த அளவு முக்கியமாக உள்ளதோ அதே அளவு பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது ரான் ஈத்தன் யோஹான் இசை. அதே போல படத்தின் ஒளிப்பதிவு படத்தின் அடுத்த பக்கபலம் முதல் காட்சியே நம்மை வியக்க வைக்கும் அளவுக்கு உள்ள இவர்கள் இருவருமே படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

படத்தின் முதல் காட்சியிலேயே நம்மை இருக்க நுனியில் கொண்டு வந்து உட்கார வைத்துத்தான் படத்தை ஆரம்பிக்கிறார் இன்னாசி பாண்டியன். அந்த பத பதப்பை படத்தின் இறுதி வரை குறையாமலும் கொண்டு செல்கிறார் வாழ்த்துக்கள்.

கண்டிப்பாக படத்தில் பாராட்ட வேண்டிய ஒன்று இப்படத்தின் இறுதி 15 நிமிடங்கள். தமிழ் சினிமாவில் நாம் பார்த்திடாத ஒரு கிளைமாக்ஸ் காட்சி மிகப்பெரிய திருப்பிமுனை அதுதான் அதற்காகவே இப்படத்தை மீண்டும் ஒரு முறை சென்று பார்க்க வேண்டும் என்று நினைக்க வைக்கிறது.
Diary Movie Review By Cine Timee

[wp-review id=”43757″]