News
வெப் தொடர் ஒன்றை இயக்கும் இயக்குநர் வெற்றிமாறன் !

வெற்றி பட இயக்குநர் வெற்றிமாறன் தற்போத் சூரி மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்தவுடன் சூர்யாவுடன் இணைந்து ‘வாடிவாசல்’ என்ற படத்தியும் அதன் பின்னர் விஜய்யுன் 68-வது படத்தை வெற்றிமாறன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சூரியின் ‘விடுதலை’ திரைப்படம் முடிந்தவுடன் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ‘ரைட்டர்’ படத்தில் நடித்த ஆண்டனியை வைத்து ஒரு வெப் தொடர் ஒன்றை இயக்கப்போவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘வட சென்னை’ படத்தின் இரண்டாம் பாகத்தை வெப் தொடராக எடுக்கப்போவதாக கூறியிருந்த வெற்றிமாறன். தற்போது வெப் தொடர் எடுக்கவுள்ளார் இதனால் இந்த தொடர் ‘வட சென்னை’ படத்தின் இரண்டாம் பாகமா இல்லை வேறு கதையா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.