News
என் பெயருக்கு முன் பட்ட பெயர் வேண்டாம் – சாய் பல்லவி !

பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான Sai Pallavi தற்போது தமிழ், தெலுங்கு பல உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவர் நடனம் ஆடும் நடிகைகளில் மிகச்சிறந்தவராக இருக்கிறார். இவருக்கு தெலுங்கு ரசிகர்கள் லேடி பவர் ஸ்டார் என்று பட்டம் வைத்துள்ளனர்.இந்த பெயருடன் இவரின் போஸ்டர்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.
இது குறித்து பேசியுள்ள சாய் பல்லவி என் பெயருக்கு முன் லேடி பவர் ஸ்டார் என்ற பட்டம் வேண்டாம். இப்படி பட்டம் வைத்துக் கொள்வது சரியல்ல. இது போன்ற பட்டங்களுக்கு நான் ஈர்ப்பு ஆக மாட்டேன். ரசிகர்கள் அன்பினால் வளர்ந்தேன். அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களினால் ரசிகளின் மனதைக் கவர்ந்தேன். இன்னும் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். நான் சாதாரணமாகவே இருக்க ஆசைப்படுகிறேன். இதுபோன்ற பட்டங்களால் மனதில் நெருக்கடி ஏற்படுமே தவிர வேறு எந்த பயனும் இல்லை என்று கூறினார்.