தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதைகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்ட படங்களில் நடிக்க பல முன்னணி நடிகைகள் ஆர்வம் காட்டியும் வருகிறார்கள். அப்படி ஜஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் டிரைவர் ஜமுனா.
கார் டிரைவாக இருக்கும் ஜஸ்வர்யா ராஜேஷ் இவரின் அப்பாவும் ஒரு கார் டிரைவர் ஆனால் அவரை யாரோ கொலை செய்து விடுகின்றனர். படத்தில் ஆடுகளம் எம்.எல்.ஏ. இவரை கொலை செய்ய ஒரு கூலிப்படை திட்டமிடுகிறது. அந்த கூலிப்படை வந்த கார் பழுதாகி போக ஜஸ்வர்யா காரில் ஏறுகிறது. அதே கூலிப்படையை பிடிக்க கமிஷனர் ஒரு பக்கம் திட்டமிடுகிறார். அதே சமயம் தன் காரில் வருவது ஒரு கூலிப்படை என்று ஜஸ்வர்யா ராஜேஷ்க்கும் தெரிய வருகிறது. ஆடுகளம் நரேனை கொலை நானே உங்களை அழைத்து செல்கிறேன் என்று உயிருக்கு பயந்து வேறு வழியில்லாமல் கூறுகிறார். அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ஒரு கார் பயணத்தை வைத்து இதற்கு முன்னர் சில படங்கள் வந்தாலும் இது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. ஒட்டுமொத்த கதையுமே ஒரு கார் பயணத்தில் முடிந்து விடுகிறது.
ஒரு பெண் கார் டிரைவராக இருப்பதால் அந்த பெண்ணுக்கு ஏற்படும் விளைவுகளை மிக நேர்த்தியாக திரையில் காட்டியுள்ளார் இயக்குநர். கதைக்கும் தன் கதாப்பாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகைகள் சிலர் மட்டுமே இருப்பார்கள் அதில் ஜஸ்வர்யா ராஜேஷ் ஒருவர்.
அப்படிப்பட்ட ஒரு கதைதான் இது மிக சரியான தேர்வு அதற்கு ஏற்ற போல மிகவும் பொருத்தமாக நடித்துள்ளார் ஜஸ்வர்யா ராஜேஷ். ஆனால் அவருக்கு ஏற்ற போல அழுத்தமான காட்சிகளை படத்தின் ஆரம்பத்தில் வைக்காமல் இறுதி 20 நிமிடத்தில் வைத்தது ஏமாற்றம்.
ஜஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஆடுகளம் நரேன் இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் அறிந்த முகங்கள் இல்லை. அதுவும் ஜஸ்வர்யா ராஜேஷ் காரில் இசையமைப்பாளராக வந்து ஏறும் அபிஷேக் நம்மை கடுப்பேற்றுகிறார்.
இப்படிப்பட்ட படத்தின் மிகப்பெரிய சவாலே ஒளிப்பதிவாளருக்குத்தான். ஒரு கார் பயணத்தை படமாக்குவது அவ்வளவு எளிதல்ல அதை திறம்பட செய்துள்ளார் கோகுல் பெனாய். ஜிப்ரான் இசை சுமார் ரகம்.
படத்தின் இறுதி 30 நிமிடத்தில் கொடுத்த விறுவிறுப்பை படத்தின் மீதியில் கொடுத்திருந்தால் படத்தை நன்றாக ரசித்திருக்கலாம்.
Driver Jamuna Review By CineTime
[wp-review id=”44959″]