Reviews
லெவன் – திரைவிமர்சனம் !

Cast: Naveen Chandra, Reyaa Hari, Shashank, Abirami, Dileepan, Riythvika, Aadukalam Naren, Ravi Varma, Arjai , Kireeti Damaraju
Production: Ajmal Khan & Reyaa Hari
Director: Lokkesh Ajls
Screenplay: Lokkesh Ajls
Cinematography: Karthik Ashokan
Editing: Srikanth.N.B
Music: D.Imman
Language: Tamil
Runtime: 2H 16Mins
Release Date: 16 May 2025
கதை களம்:
கதை ஆரம்பம் சென்னையில் சிட்டிக்குள் தொடர்ச்சியாக சில மனிதர்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுவதும், அவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதுமாய் காட்சிகள் அரங்கேறுகிறது.இந்த கொலை வழக்கை விசாரிக்கிறார் மற்றொரு போலீஸ் அதிகாரியான ஷாஷாங். வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் கொலைகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், ஒரு விபத்தில் ஷாஷாங் சிக்கிக் கொள்ள, அவர் கோமாவிற்குச் சென்று விடுகிறார்.
அதனைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கானது நவீனிடம் செல்கிறது. இவருக்கு துணையாக சப் இன்ஸ்பெக்டர் திலீபனும் வருகிறார். நவீன் தனது பாணியில் விசாரணையை தொடங்க, வழக்கானது அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. இறுதியில், இந்த படுகொலையை செய்து வரும் அந்த நபர் யார் என்பதே படத்தின் மீதிக் கதை.
படம் எப்படி இருக்கு
நடிகர் நவீன் சந்த்ரா ஆரம்பத்திலேயே மிகவும் மாஸாக எண்ட்ரீ கொடுக்கும் கதையின் நாயகன். தொடர்ச்சியாக அடுத்து நடக்கும் சண்டைக் காட்சியிலும் தனது மாஸ் ஆக்ஷனைக் கொடுத்து படத்தின் கதாபாத்திரத்திற்குள் மிக எளிதாக வந்து விடுகிறார்.தனது உடல்மொழியை மிகவும் நேர்த்தியாக கையாண்டு, அக்கதாபாத்திரத்தோடு ஒன்றி விடுகிறார் நவீன். வழக்கினை விசாரிக்கும் விதமும் அதற்கான ஆக்ஷனும் நவீனுக்கு ஆகப்பொருத்தம்.
குறிப்பாக கதையின் நாயகி ரேயயா ஹரி சிறப்பான நடிப்பை வெளிபடுதியுளார். ஆனால் நாயகனுக்கு ஜோடியாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து நடிகை ரித்விகா, ரேயாஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜய் உள்ளிட்ட நடிகர் நடிகைகளும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருக்கின்றனர். திரைக்கதையின் வேகம் படத்திற்கு மற்றுமொரு பலம் என்றே கூறலாம்.
மேலும் குறிப்பாக சின்ன கதாபாத்திரம் என்றாலும் அதை அளவாகவும் அழகாகவும் செய்து முடித்திருக்கிறார் அபிராமி. படத்தில் தோன்றும் ப்ளாஷ் பேக் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். அதனைப் பற்றி விவரித்து கூறினால், படத்தின் மீதான சஸ்பென்ஸ் உடைந்து விடும் என்பதால், மேற்கொண்டு அதன் காட்சிகளை விவரிக்க இயலாது.
இயக்குனர் மிகவும் சிறப்பான ஒரு கதையை கையில் எடுத்து அதை மிகவும் நேர்த்தியாக கையாண்டு வென்றிருக்கிறார் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
இசையமைபாளர் டி இமானின் இசையில் விடியாத வானம் என்ற மனோவின் குரலில் உருவான பாடல் படம் பார்ப்பவர்களின் மனதை பதம் பார்க்கும். மேலும் க்ளைமாக்ஸ் காட்சிகள் மனதை உருக்க மற்றும் கண்களில் கலங்க வைத்து விடுகிறது.
மேலும் கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான வெளிச்சத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறது.ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு சுபேந்தரின் கலை வடிவம் அதிலும், கொலைகாரனின் மாஸ்க் அருமை என படத்திற்கு அனைத்துமே பலம் தான்.
பிளஸ்
நடிகர் நவீன சந்திரா நடிப்பு , பாடல் ,கதை களம் மற்றும் திரைக்கதை
மைனஸ்
கதாநாயகி தேர்வு, முதல் பாதி திரைக்கதையின் நேரம்
Eleven – தரமான க்ரைம் படம்.