Connect with us
 

News

விபத்தில் சிக்கிய திகில் அனுபவங்களை பகிர்ந்த பகத் பாசில் !

Published

on

தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீசக்ஸ் படங்களில் நடித்துள்ள பகத் பாசில் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். மலையன்குஞ்சு என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தபோது பகத் பாசில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தில் சிக்கிய திகில் அனுபவங்களை வலைத்தளத்தில் பகத் பாசில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ளா பதிவில் படப்பிடிப்பில் நடந்த விபத்து காரணமாக ஏற்பட்ட காயத்தில் இருந்து தேறி வருகிறேன்.

ஆபத்துக்கு அருகில் சென்று நான் உயிர் பிழைத்துதிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கீழே விழும்போது எனது முகம் தரையில் மோதுவதற்கு மும்பு ஏதோ உந்துதலில் கைகளை தரையில் ஊன்றிவிட்டேன். இப்படி சமயோசிதமாக நான் செய்த அதிர்ஷடம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.

சிபத்து காரணமாக மூக்கின் மேல் மூன்று தையல்கள் போடப்பட்டுள்ளன. அந்த தழும்பு மறைய கொஞ்ச காலமாகும் என்றார்.