Connect with us
 

News

தளபதி 65 படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல காமெடி நடிகர் !

Published

on

நெல்சன் இயக்கத்தில் தளபதி நடித்து வரும் தளபதி 65 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜிவாவில் நடந்து முடிந்தது. ஜார்ஜியாவில் மட்டும் 30 சதவீத படப்பிடிப்பு நடந்து முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ள நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தவுடன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இந்த செய்தியை ரசிகர் ஒருவர் யோகி பாபுவிடம் கேட்க ஆமாம் தளபதி 65 படத்தில் நான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் விஜய்யுடன் யோகிபாபு மெர்சல், சர்கார், பிகில் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.