Connect with us
 

News

துருவ நட்சத்திரம் டிரைலர் அப்டேட் கொடுத்த கௌதம் மேனன் !

Published

on

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி பல ஆண்டு கிடப்பில் கிடந்த திரைப்படம் துருவ நட்சத்திரம்.

விக்ரமுடன் இப்படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்ய தர்ஷினி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு இப்படட்டின் படப்பிடிப்பு ஆரம்பித்து.

தற்போதுதான் இப்படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் நவம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் புதிய ட்ரைலர் அக்டோபர் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதன் புதிய ட்ரைலர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் ஆரம்பிக்கும் முன்னர் பல திரையரங்குகளில் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.