Connect with us
 

News

வெந்து தணிந்தது காடு அதிகாலை காட்சி பார்க்க வரும் ரசிகர்களுக்கு கெளதம் மேனனின் வேண்டுகோள் !

Published

on

மூன்றாவது முறையாக கெளதம் மேனன் மற்றும் சிம்பு இணைந்துள்ள திரைப்படம் Vendhu Thanindhathu kaadu. இப்படம் நாளை முதல் உலகமெங்கும் மிக பிரம்மாண்டமாக வெளியாகிறது.

ஜசரி.கே.கணேஷ் சார்ப்பில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி என்பவர் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகை ராதிகாவும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் முதல் நாள் காட்சி அதிகாலை 4 மணிக்கு ஆரம்பமாகிறது அப்படி முதல் காட்சிக்கு வரும் ரசிகர்களுக்கு இயக்குநர் கெளதம் மேனன் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

அதாவது இப்படத்தில் இடம்பெற்றுள்ள கதாப்பாத்திரங்களின் விபரங்களை சொல்ல அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் அதனால் அதிகாலை காட்சி பார்க்க வரும் ரசிகர்கள் நன்றாக தூங்கு திரையரங்குகளுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

தன் ஏழ்மை காரணமாக மும்பைக்கு பிழைக்க போகும் சிம்பு அங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்களும்தான் முதல் பாகத்தின் கதை இதில் சிம்பு 19 வயது இளைஞன் முதல் 40 வயது கொண்ட மனிதன் வேடத்தில் நடித்துள்ளார்.