Connect with us
 

News

விஜய்சந்தர் தயாரிப்பில் ஹன்சிகா நடிக்கும் புதிய திரைப்படம் !

Published

on

வாலு, ஸ்கெட்ச் ,சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார்.ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய்சந்தர் தயாரிக்கும் முதல் படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை இயக்குனர்கள் சபரி கிரீசன் , சரவணன் இயக்குகிறார்கள். (கூகுள் குட்டப்பன்).பிரபல ஒளிப்பதிவாளர் சக்தி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு கேமராவை இயக்க, விஜய் சேதுபதி கிளாப் போர்டை அடிக்க, KS ரவிக்குமார் முதல் காட்சியை இயக்கினார்.இதர நடிகர்கள் மற்றும் தொழிநுட்பக்கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும்