News
மீண்டும் இணையும் ஹரிஷ் கல்யான் – பிரியா பவானி சங்கர் கூட்டணி !

தெலுங்கில் வெளியான பெள்ளி சூப்ளு அங்கு மிகப்பெரிய வெற்றியடைந்தது. விஜய் தேவர்கொண்டா மற்றும் ரீத்து வர்மா நடித்திருந்தனர். மிக குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூலை பெற்றது.
இப்படத்தின் ரீமேக் உரிமத்தை பிரபல இயக்குநர் கெளதம் மேனன் வாங்கினார். தமிழில் இப்படத்திற்கு பொன் ஒன்று கண்டேன் என பெயரிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார். அப்படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கவிருந்தனர். பின்னர் என்ன ஆனதோ தெரியவில்லை அப்படம் அப்படியே கைவிடப்பட்டது.
அதன் பின்னர் அப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் ஓ மணப்பெண்ணே என்ற பெயரில் வெளியானது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஹரிஷ் கல்யாண் – பிரியா பவானி சங்கர் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர். இப்படத்தை இயக்குநர் சுந்த்ர் கார்த்திக் என்பவர் இயக்கவுள்ளார்.