Connect with us
 

News

ஹரீஷ் கல்யாணின் நட்சத்திர அந்தஸ்தை பல படிகள் உயர்த்தும் படம் !

Published

on

காதலுக்கும் காமடிக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களுக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு இருந்து வருகிறது என்பதற்கு சிறந்த உதாரணம் பெல்லி சூப்பலு என்ற ஒரு தெலுங்கு திரைப்படம்.

இந்த படம் தற்போது தமிழில் ஹரீஷ் கல்யான் மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் ஓ மணப் பெண்ணே என்ற பெயரில் தயாராகி வருகிறது. இயக்குனர் கார்த்திக் சுந்தர் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குநர் கார்த்திக் சுந்தர் பிரபல இயக்குனர் விஜய் அவர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். ஓ மணப் பெண்ணே படம் பற்றி இவர் கூறும் போது. இந்த படம் ஹரீஷ் கல்யாணின் நட்சத்திர அந்தஸ்தை பல படிகள் உயர்த்தும் என்று கூறியுள்ளார்.