News
திருமணம் செய்து கொண்டு தாயாக எனக்கும் ஆசை – தமன்னா !
நடிகை தமன்னா சுமார் 17 வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 32 வயதாகும் தமன்னாவுக்கு பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
இதற்கு விளக்கம் கொடுத்துள்ள தமன்னா ‘அனைவரையும் போலவே எனது பெற்றோரும் என்னை திருமணம் செய்து கொள்ளும்படு கூறி வருகிறார்கள். எனக்கும் திருமண உறவு மீது நம்பிக்கை உள்ளது. திருமணம் செய்து கொண்டு தாயாக வேண்டும் என்று ஆசையாகவும் உள்ளது.
என்னால் தற்போது அதற்கு நேரத்தை ஒதுக்க முடியாத நிலையில் நான் உள்ளேன். நடிப்புத் தொழிலில் மிகவும் பிஸியாக உள்ளேன். சில சமயங்களில் தொலைபேசியில் கூட என் பெற்றோர்களுடனே பேச முடியாத நிலையில் நான் இருக்கிறேன். தற்போது என் சந்தோஷம் எல்லாமே சூட்டிங் தளத்தில்தான் இருக்கிறது. எனது தொழிலை நான் இந்த அளவிற்கு சிறப்பாக செய்வதற்கு எனது பெற்றோர் மற்றும் எனது ரசிகர்கள் ஆதரவு என்பதை நான் என்றும் மறக்க மாட்டேன்.