Connect with us
 

News

சிறு வயதிலிருந்தே எனக்கு நடிக்க மிகவும் ஆசை – அதிதி ஷங்கர் !

Published

on

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் விருமன். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் Aditi Shankar நடித்துள்ளார்.

நேற்று மதுரையில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட Aditi Shankar பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அதில் அவர் பேசியதாவது.

இப்படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த நடிகர் சூர்யா சாருக்கு மிக்க நன்றி. இந்த படத்தில் எனக்கு மிக நல்ல வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் நான் நடிக்கும் போது என் அப்பாவின் தலையீடு எப்போதும் இருந்ததில்லை. இனி அடுத்தடுத்து படங்களில் நடிக்கவுள்ளேன்.

சிறுவயதில் இருந்தே எனக்கு நடிப்பதற்கு மிகவும் ஆசை. அப்பா இயக்கத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அப்பா எனக்கு வாய்ப்பு தந்தால் கண்டிப்பாக நடிப்பேன். கிராமத்து பெண்கள்தான் எப்போதும் அழகு. விருமன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று Aditi Shankar கூறினார்.