News
10 படங்களுக்கு மேல் நான் இயக்க மாட்டேன் – லோகேஷ் கனகராஜ் !
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமானார். அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குக்கு பின்னர் கைதி, விக்ரம் படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பட்டியலில் இணைந்தார்.
தற்போது தளபதி விஜய் நடிக்கு லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் ஜூன் 22-ம் தேதி அதாவது விஜய் பிறந்த நாள் அன்று லியோ படத்தின் முதல் பாடலான நா ரெடி என்ற பாடலை வெளியிட உள்ளது படக்குழு.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘ நான் சினிமாவில் அதிக படங்களை இயக்க விரும்பவில்லை. இன்னும் 10 படத்தை இயக்கிய பின்னர் படங்களை இயக்க மாட்டேன். எல்.சி.யு.கான்செப்ட் தயாரிப்பாளர்களின் உதவி இல்லாமல் உருவாக்கியிருக்க முடியாது அதற்காக நான் எப்போதும் நன்றியோடு இருப்பேன். நடிகர் சஞ்சய் தத் அவர்களின் பெரிய ரசிகன் நான். லியோ படப்பிடிப்பு துவங்கி 3 நாட்களின் என்னை அவர் மகன் என்று அழைத்தார். நான் எல்லா நடிகர்களையும் சார் என்றுதான் அழைப்பேன். மாஸ்டர் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதிலிருந்து நான் விஜய் அவர்களை அண்ணா என்றுதான் அழைப்பேன். படப்பிடிப்பு தளத்திலும் அனைவரும் அவரை அண்ணா என்றுதான் அழைப்பார்கள். அந்த இடத்தை விஜய் கொடுத்திருக்கிறார். ஜூன் 22 அன்று நான் ரெடி பாடல் அல்லாமல் ரசிகர்களுக்காக மற்றுமொரு மிகப் பெரிய சர்ப்ரைஸ் உள்ளது. என தெரிவித்தார்.