News
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை பற்றி பேசும் படமா சூர்யா 43?
இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் சூர்யா இருவரும் மீண்டும் இணைய உள்ளனர். இப்படம் சூர்யாவின் 43-வது படமாகும். இப்படத்தில் நாயகியாக நஸ்ரியா நஜீம் நடிக்கிறார். முக்கியமான வேடங்களில் துல்கர் சல்மான் மற்றும் தமன்னாவின் காதலன் விஜய் வர்மா நடிக்கின்றார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இது அவரின் 100-வது படமாகும். சூரரைபோற்று படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னர் இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது என்பதால் எதிர்பார்க்கும் பெரிய அளவில் உள்ளது.
இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை வீடியோ வடிவில் வெளியிட்டார் சூர்யா. அதில் மாணவர்கள் போராட்டம் போலீசார் மாணவர்களை அடக்குவது போன்றும் துப்பாக்கிச்சூடு போன்ற குறியீடுகள் அதில் காண்பிக்கப்படுகின்றன. மேலும் வீடியோ இறுதியில் புறநானூறு என குறிப்பிட்டு மேலே உள்ள இரண்டு விஷயங்களை கறுப்பு லேபிள் போட்டு மறைத்துள்ளனர்.
இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது 1967-ம் வருடம் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை தழுவி இப்படம் உருவாகிறது என தெரிகிறது. படம் முழுவதும் இதை பற்றிய சொல்லப்போகிறது இல்லை அதை மையமாக வைத்து தற்கால அரசியல் சம்பவங்களையும் வைத்து உருவாகிறதா இப்படம் என்று அடுத்து அடுத்து வரும் அப்டேட்டுகள் நமக்கு சொல்லி விடும்.