படத்தில் வரும் ஜி.வி.பிரகாஷ் அரைகால் டவுசர், அழுக்கான டீ ஷர்ட், கலர் அடித்த தலைமுடி முகத்தில் கொஞ்சம் தாடி என கதாப்பாத்திரத்துக்கு ஏற்ற போலவே தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். நட்பு, காதல்,பாசம்.கோபம்,வெறுப்பு என பல பாவங்களை காட்டி தான் ஏற்ற அந்த கதாப்பாத்திரத்துக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் சிறப்பாகவே நடித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
ஜி.வி.பிரகாஷ் காதலியாக வரும் நடிகை அபர்ணதி காதல் காட்சிகளில் ஜி.வி.பிரகாஷுடன் தாராள நெருக்கமாகவே நடித்துள்ளார்.கொஞ்சம் அதிகமாக நடித்து விட்டாரோ என்று பல இடங்களில் இவரின் நடிப்பு இருக்கிறது.
ஜி.வி.பிரகாஷின் நண்பர்களாக வரும் நந்தன்ராம் மற்றும் பசங்க பாண்டி இருவருமே கொடுத்த வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்கள்.
இவர்கள் மூவருமே நெருங்கிய நண்பர்கள் என்று நமக்கு காட்டும் போதே கண்டிப்பாக இவர்களின் கண்டிப்பாக ஒருவர் இறந்து விடுவார் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. ஜி.வி.பிரகாஷ் காதலியாக அபர்ணதி, நந்தன்ராம் அக்காவாக ஜெனிபர், பசங்க பாண்டி காதலியாக சரண்யா ரவிச்சந்திரன் என பெண்கள் கண்டிப்பாக வேண்டும் என்பதற்காக இவர்களையெல்லாம் வைத்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் அம்மாவாக வரும் நடிகை ராதிகா அனுபவ நடிப்பை கொடுத்துள்ளார்.
படத்தில் வில்லனாக வரும் ரவி மரியா மற்றும் காவேரி நகரின் போலீஸ் அதிகாரியாக வரும் இவர் இரண்டு ரவுடி கோஷ்டிகளை வளரவிட்டு அவர்களை மோத விட்டு அதில் பணம் சம்பாதித்து அரசியல் செய்கிறார். குறிப்பாக இவர் படத்தின் இறுதியில் உயிருடன் வருவது மிகப்பெரிய அதிச்சி நமக்கு.
ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இடைவேளைக்கு முன்னதாகாவே தேவையில்லாமல் 3 பாடல்கள். சில இடங்களில் தேவையில்லாத இடத்தில் பாடலை வைத்து நம்மை குழப்பி விடுகிறார்கள்.
படத்தின் ஒட்டு மொத்த கதையுமே இதுதான் இதில் எங்கு குடிசை வாழ் மக்களின் குடியமர்வு அவர்களின் பிரச்சனையை இருக்கிறது என்று தெரியவில்லை
Cinetimee
வெயில் மற்றும் அங்காடி தெரு என எளிய மக்களின் போராட்டமான அந்த வாழ்க்கையை மிகவும் யதார்த்தமாக பதிவு செய்த இயக்குநர் வசந்தபாலன். இதன் காரணமாகவே ஜெயில் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
அதோடு படத்தில் ஜிவி பிரகாஷ் திருடனாக நடித்திருந்தாலும் அதற்கான காரணமும் நியாயமும் சரியாக அமையவில்லை. அதே போல் சில கதாபாத்திரங்கள் எதை நோக்கி செல்கிறது என்று கதாபாத்திரங்கள் அளவிற்கு நடித்திருக்கிறார்கள்.
ஒரு வெற்றி படத்துக்கு தேவையான கதை இது அழுத்தமான காட்சிகளும், உணர்வுபூர்வமான கதை இருந்தும் அதை காட்சி படுத்திய விதத்தில் இயக்குநர் வசந்தபாலன் கோட்டை விட்டுவிட்டார்.