Connect with us
 

News

ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்திற்கு சிறப்பு காட்சிகள் இல்லை !

Published

on

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படம் உலகம் முழுவதும் வருகிற 10-ம் தேதி திரைக்கு வெளியாகவுள்ளது. அமெரிக்காவில் இப்படத்தின் முன்பதிவு ஆரம்பித்து விட்டது.

இந்த நிலையில் தமிகத்தில் மொத்தமாக 1152 திரைகள் இருப்பதாகவும் அத்தனை திரையரங்குகளிலும் ஜெயிலர் படத்தை திரையிட ஆர்வமாக இருக்கிறோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதிகாலை 6 மணிக்கு நிச்சயமாக ஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படும் என எதிர்பார்த்த நிலையில் ஜெயிலர் படத்திற்கு சிறப்பு காட்சி எதுவும் இல்லை எனவும் முதல் காட்சியே காலை 9 மணிக்குதான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான வாரிசு, அஜித் நடிப்பில் வெளியான துணிவு படங்களுக்கும் சிறப்பு காட்சிகள் வழங்க அரசு மறுப்பு தெரிவித்த நிலையில் பொன்னியின் செல்வன் 2, மாமன்னன், மாவீரன் போன்ற படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.