News
மூன்று நாளில் உலக அளவில் 150 கோடி வசூல் செய்த ஜெயிலர் !

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில் இது வரையில் சுமார் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க இவர்களுடன் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி ஆகியோர் படத்தின் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
பன்மொழி படமாக கடந்த 10-ம் தேதி வெளியான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. ராக் ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதும் 52 கோடியும், உலக அளவில் ரூ.70 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில் இதுவரையில் ஜெயிலர் திரைப்படம் உலகளவில் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.