Connect with us
 

News

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது – நடிகை கஸ்தூரி !

Published

on

சூப்பர் ஸ்டார் பட்டத்தின் சர்ச்சையே இன்னும் தீராத நிலையில் நயன்தாரா அவர்களை லேடி சூப்பர் ஸ்டார் என்று ஏற்றுக்கொள்ள முடியாது என நடிகை கஸ்தூரி தெரிவித்தது பெரும் சர்ச்சையை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்தியாவில் நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அங்கீகரிக்கவே முடியாது என கஸ்தூரி தெரிவித்துள்ளார். என்னை பொருத்தவரை நடிகைகளில் லேடி சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் பழம்பெரும் நடிகைகள் கே.பி.சுந்தராம்பாள் மற்றும் விஜயசாந்தி போன்றவர்கள்தான் என்று கூறியுள்ளார்.

கஸ்தூரியின் இந்த கருத்து நயன்தாரா அவரின் ரசிகர்களை மீண்டும் வம்புக்கு இழுக்கும் வகையில் உள்ளது.