News
அறிவியலையும் கற்பனையும் கலந்து சொல்லும் டைம் லூப் திரைப்படம் ஜாங்கோ !

அறிவியலும், கற்பனையும் கலந்த வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக ஜாங்கோ திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இது குறித்து படத்தின் இயக்குநர் மனோ கார்த்திகேயன் கூறுகையில்:-
வாழ்க்கையில் ஒரு வினாடியை கூட வீணாக்க நினைக்காத இளைஞன் தனது கொள்கையால் குடும்ப வாழ்க்கையை இழக்கிறான். டைம்-லூப் மூலம் இழந்த வாழ்க்கையை அவன் எப்படி மீட்கிறான் ? காலச்சக்கரத்திலிருந்து எப்படி மீள்கிறார்? என்பதுதான் ஜாங்கோ படத்தின் கதை.
டைம் – லூம் மையமாக வைத்து வெளிவந்த படங்களில் ஒரு நபர் சம்பவத்துக்குள்ளே ஒரு காலகட்டத்துக்குள்ளோதான் சிக்கியிருப்பார். ஆனால் இந்த படத்தின் ஹீரோ திரும்ப திரும்ப ஒரு நாளுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருப்பார். அந்த ஒரு நாளில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை அறிவியல் பூர்வமாகவும் கொஞ்சம் அழகான கற்பனையையும் கலந்து சொல்லியிருக்கிறோம்.
இந்த படத்துக்காக பார்த்து பார்த்து திரைக்கதையை வடிவமைத்திருக்கிறோம். தமிழ் சினிமாவிலேயே, இந்திய சினிமாவிலேயே இத்திரைப்படம் நிச்சயம் பெரியளவில் பேசப்படும். நடிகர் நடிகைகளும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த படத்தை திரையில் காணும்போது ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் ஏற்படும். வருகிற 19-ம் தேதி தமிழகம் முழுவதும் ஜாங்கோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவிருக்கிறது என்றும் கூறினார்.
புதுமுக கதாநாயகனாக சதீஷ், கதாநாயகியாக டிக்டாக் புகழ் மிருணாளினி ரவி நடிக்கிறார்கள். இவர்களுடன் கருணாகரன், ஆர்.ஜே.ரமேஷ், ஹரீஸ், பராடி, வேலுபிரபாகரன் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையமைத்திருக்கு இப்படத்திற்கு கே.தில்லை ஒளிப்பதிவு செய்துள்ளார், சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
அட்டகத்தி, மீட்சா, சூது கவ்வும் போன்ற தரமான வெற்றி படங்களை தயாரித்த சி.வி.குமார் தயாரிப்பில் ஜென் ஸ்டூடியோ சார்பில் சுரேந்திரன் ரவி இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஜாங்கோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறோம்.