Connect with us
 

News

மூன்றாவது முறையாக மாமியார் தயாரிப்பில் ஜெயம் ரவி !

Published

on

Jayam Ravi மனைவி ஆர்த்தி இவரின் தாய் சுஜாதா விஜயகுமார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர். இவர் தயாரிப்பில் Jayam Ravi அடங்க மறு மற்றும் பூமி ஆகிய படங்களில் நடித்தார். இதில் அடங்க மறு திரைப்படம் நல்ல லாபத்தை கொடுத்த திரைப்படம்.

இந்த நிலையில் மூன்றாவது முறையாக மாமியார் தயாரிப்பில் Jayam Ravi நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆன்டனி என்பவர் இயக்கவுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஜெயம் ரவி அகிலன், பொன்னியின் செல்வன், இறைவன் படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை எல்லாம் நடித்து முடித்த பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.