Trailer
ஜெயம் ரவி மிரட்டலான நடிப்பில் உருவான சைரன் படத்தின் ட்ரைலர் வெளியானது !

அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சைரன். ஜெயம் ரவியுடன் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபாமா பரமேஸ்வரன், சாந்தினி தமிழரசன், சமுத்திரக்கனி, யோகி பாபு பலர் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஹோம் மேக்கர்ஸ் மூவீஸ் தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 16-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் தற்போது ரசிகர்களிடையே படத்தின் மேல் உள்ள ஆர்வத்தை அதிகரித்துள்ளது.