News
36 வருடத்திற்கு பின்னர் விக்ரம் நடிகை லிசியின் வருத்தம் !
உலக நாயகனின் நடிப்பில் கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’ இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர் அதில் ஒருவர் நடிகை லிசி. இயக்குநர் பிரியதர்ஷனை திருமணம் செய்து கொண்ட இவருக்கு கல்யாணி பிரியதர்ஷன் மகள் உண்டு இவரும் ஒரு நடிகை. சில வருடங்களுக்கு முன்னர் இயக்குநர் பிரியதர்ஷனை விவாகரத்து செய்து விட்டார். தற்போது சென்னையில் போஸ்ட் புரொடஷன் பணிகளுக்கான மிகப்பெரிய ஸ்டுடியோ ஒன்ற நடத்து வருகிறார். தற்போது உருவாகி வரும் விக்ரம் படத்தின் ஒலிக்கலவை சேர்ப்பு பணிகள் இங்குதான் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படம் குறித்து பேசியுள்ள லிசி எனக்கு 17 வயதாக இருக்கும் போது ‘விக்ரம்’ படத்தில் நடித்தேன். மிகப்பெரிய நடிகரான கமல்ஹாசன் மற்றும் கிரேக்க ராணி போன்ற பாலிவுட் கதாநாயகி டிம்பிள் கபாடியா ஆகியோருடன் இணைந்து நடித்தபோது மிகப்பெரிய கனவு போல இருந்தது. தற்போது அதே பெயருடன் மீண்டும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன். ஆனால் இப்படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கூட தரவில்லை என்பது எனக்கு மிகப்பெரிய வருத்தமே.
அதே சமயம் என்னுடைய ஸ்டுடியோவில்தான் இந்த படத்திற்கு போஸ்ட் புரொடஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதால் இப்படத்தில் நானும் பங்கு கொண்டது போல மகிழ்ச்சியாக உள்ளது எனக்கு. இதற்கு முன்பு வந்த ‘விக்ரம்’ படத்திற்கும் இந்த ‘விக்ரம்’ படத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை படம் மிகவும் அருமையாக வந்துள்ளது என்று கூறினார் நடிகை லிசி.