Trailer
கண்ணப்பா படத்தின் ட்ரைலர் வெளியானது !
வரலாற்று படைப்பாக உருவாகியுள்ள கண்ணப்பா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் வரலாற்று கதையை தழுவி உருவாகியுள்ள ஆன்மீக திரைப்படம் கண்ணப்பா. பாலிவுட் இயக்குநர் முகேஷ் குமார் சிங் திரைப்படத்தை இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கியவர்.
இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், ப்ரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
கண்ணப்பா திரைப்படம் வருகிற 27-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.