Connect with us
 

News

மகான் படத்தில் வாணி போஜன் காட்சிகள் நீக்கியது ஏன் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் !

Published

on

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் மகான். இவர்களுடன் பாபி சிம்ஹா, சிம்ரன், பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் நடிகை வாணி போஜன் நடித்த காட்சிகள் ஒன்று கூட இடம்பெறவில்லை இதனால் இவரின் ரசிகர்கள் பலர் அதிர்ச்சியிலும் இணையத்தில் காட்சிகள் எங்கே என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.

தற்போது இது குறித்த கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளார் இப்படத்தின் இயக்குநர் கார்த்திக்சுப்புரா:- கதையின் கருப்படி சிம்ரனை விட்டு பிரிந்து செல்லும் விக்ரம் வாணி போஜனுடன் காதல் ஏற்பட்டு அவருடன் வாழ்கிறார் என்பது போன்றுதான் கதை அமைக்கப்பட்டிருந்தது.

இதற்காகத்தான் வாணிபோஜனை இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தோம். அதற்காக சில காட்சிகள் எடுத்த நிலையில் கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக திட்டமிட்டது போல பல காட்சிகளை எங்களால் படமாக்க முடியாமல் போனது.

குறிப்பாக வாணி போஜன் விக்ரம் சம்பந்தப்பட்ட பல காட்சிகளை முழுமை பெறாமல் போனது. இதனால் வாணி போஜன் காட்சிகளை நீக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. இது பற்றி வாணி போஜனிடம் எடுத்துக் கூறொனோம் அவரும் பெருந்தன்மையாக அதை ஏற்றுக்கொண்டார் என்றார் வாணி போஜனுக்கு மிக்க நன்றி என்றும் கார்த்திக் சுப்புராஜ் கூறுனார்.