News
சிலம்பரசன் ஜோடியாக நடிக்கும் கயாடு லோகர் !

பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சிலம்பரசன். இப்படம் அவரின் 49வது படம். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் சந்தானம் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் சிலம்பரசன் ஜோடியாக நடிகை கயாடு லோகர் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ஆரம்பித்து டிசம்பர் மாதம் திரைக்கு கொண்டுவரவுள்ளது படக்குழு.
சமீபத்தில் வெளியான டிராகன் படத்தில் நடித்த கயாடு லோகர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனை தொடர்ந்து தற்போது இவருக்கு பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க வாய்ப்புகள் தேடி வருகிறதாம்.