News
சைரன் படத்துக்காக 5 கிலோ எடையை அதிகரித்த கீர்த்தி சுரேஷ் !
Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”. பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் பேசியதாவது :
இதுவரை நாங்கள் தயாரித்துள்ள படங்களுக்கு உங்கள் ஆதரவைத் தந்துள்ளீர்கள் அதேபோல் இந்த சைரனுக்கும் ஆதரவு தாருங்கள். ஒரு ஆம்புலன்ஸ் சைரனுக்கும், போலீஸ் சைரனுக்கும் உள்ள போராட்டம் தான் இந்த சைரன் படம். எப்போதும் வித்தியாசமான கேரக்டர்களில் அசத்தும் எங்கள் அன்பு ஜெயம் ரவி இந்தப்படத்திலும் அசத்தியுள்ளார்.
என் மருமகன் என்பதால் கூறவில்லை. படம் பார்த்தால் உங்களுக்கே புரியும். இந்தப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும். நந்தினி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் அட்டகாசமாக நடித்துள்ளார். இந்தப் படம் அவர் நடிப்பு வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும். ஜெயம் ரவிக்கு இணையாக எதிர்த்து நிற்க, அவரால் முடியுமா என முதலில் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது, ஆனால் இந்தப்படத்திற்காக 5 கிலோ எடைகூட்டி அந்த போலீஸ் உடையில் கச்சிதமாக இருந்தார்.
அற்புதமாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி எல்லா பாத்திரங்களிலும் எல்லா மொழிகளிலும் அசத்துகிறார். இந்தப்படத்திலும் நன்றாக நடித்துள்ளார். யோகி பாபு படம் முழுக்க வருகிறார். அவர் நடிப்பு பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தேன். அவருக்கு வாழ்த்துக்கள். அழகம் பெருமாள், அஜய், துளசி மேடம், சாந்தினி இன்னும் பலர் நடித்துள்ளனர். அனுபமா பரமேஸ்வரன் ப்யூட்டிஃபுல்லான பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த விழா நாயகன் ஜீவி அருமையான நான்கு பாடல்கள் தந்துள்ளார், அவருக்கு நன்றி. கேமராமேன் செல்வகுமார் அவ்வளவு அற்புதமான விஷுவல்கள் தந்துள்ளார்.
திலீப் மாஸ்டர் சண்டைக்காட்சிகள் நன்றாக எடுத்துள்ளார். படத்தில் எல்லோரும் தங்கள் உயிரை தந்து உழைத்துள்ளனர். ரூபன் எங்கள் ஃபேமிலி மாதிரி. எல்லா படத்திலும் இருப்பார். அந்தோணி பாக்யராஜை ரூபன் தான் அறிமுகப்படுத்தினார். நிறைய வெற்றிப் படங்களில் பணியாற்றியுள்ளார். எனக்கு முதலில் சொன்னது காமெடி கதை. ரவியிடம் தான் இந்தக் கதையைச் சொன்னார். சொன்ன மாதிரி நன்றாக படத்தை எடுத்துள்ளார். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.