News
கொரோனாவிலிருந்து குணமடைந்த கீர்த்தி சுரேஷ் !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் கடந்த வாரம் அறிவித்தார்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனாவிலிருந்து முற்றிலும் குணமாகிவிட்டதாக தற்போது அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில் நெகட்டிவ் என்பது இந்தக் காலத்தில் பாசிட்டிவ்வான விஷயமாகிவிட்டது.
உங்களின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி உங்களுக்கு இனிமையான பொங்கல் மற்றும் சங்கராந்தியை சிறப்பாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.