Connect with us
 

News

கீர்த்தி சுரேஷ் திருமண வதந்திக்கு தந்தை விளக்கம் !

Published

on

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

சமீப காலமாக கீர்த்தி சுரேஷ் பற்றிய கிசு கிசுக்கள் அதிகமாக பரவி வருகின்றன. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னதாக துபாய் தொழில் அதிபர் பர்ஹான் என்பவரும் கீர்த்தி சுரேஷும் ஒரே வடிவிலான நிறம் டிசைனில் உடை அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டனர்.

இது போதும் என நினைத்து பல மீடியாக்காள் கீர்த்தி சுரேஷ் பர்ஹானை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் வதந்தியை பரப்பி விட்டனர். இந்த வதந்திக்கு கீர்த்தி சுரேஷ் தந்தையும் சினிமா தயாரிப்பாளருமான சுரேஷ்குமார் மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘கீர்த்தி சுரேஷும் பர்ஹானும் நண்பர்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராக பர்ஹான் இருக்கிறார். நாங்கள் வளைகுடா நாடுகளுக்கு பயணம் செய்தபோது எங்களோடு பல முறை வந்து இருக்கிறார். இதுபோன்ற தவறான தகவலை பரப்புவதால் எங்கள் குடும்பத்தை மற்றுமன்றி பர்ஹான் குடும்பத்தையும் பாதிக்க செய்யும் என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் எனது நண்பர்கள் விளக்கம் அளிக்கும்படி வற்புறுத்தியதால் மட்டுமே இந்த வீடியோ பதிவை வெளியிடுகிறேன். தயவு செய்து இதுபோன்ற ஆதாரம் இல்லாத தகவலை யாரும் இனி வெளியிட வேண்டாம் என கூறியுள்ளார்.