மலையாளத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ஸ்வாதன்த்ரியம் அர்த்தராத்ரியில் என்ற படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்தான் இந்த குமரி மாவட்டத்தின் தக்ஸ் திரைப்படம்.
பிரபல நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இப்படத்தை இயக்கிருக்கிறார். இவரின் இரண்டாவது திரைப்படம் இது. படத்தின் நாயகனாக ஹிரிது ஹரூன், நாயகியாக அனஸ்வரா ராஜன் நடிக்க இவர்களுடன் பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த் என பலர் நடித்துள்ளனர்.
எதிர்பாராத விதமாக சண்டையில் ஹீரோ அடித்தவன் இறந்து போகிறான். இதனால் ஹீரோவுக்கு ஆயுள் தண்டனை வழங்குகிறது நீதிமன்றம். சிறைச்சாலைக்கு செல்லும் ஹீரோ சிறைக்குள் இருக்கும் சில கைதிகளுடன் அங்கிருந்த தப்பிக்க திட்டம் போடுகிறார். அப்படி போடும் திட்டத்தில் வெற்றி பெற்று அங்கிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீத்க்கதை.
படம் முழுவதுமே ஒரு சிறைக்குள்ளே நடந்து முடிகிறது இறுதி கட்டத்தை தவிர. சிறைச்சாலையை செட் அமைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக அதை பார்ப்பதற்கு சிறைச்சாலை போலவே இல்லை என்பது சற்று வருத்தமாக உள்ளது.
ஹிரிது ஹரூன் மற்றும் பாபி சிம்ஹா பிளாஷ்பேக் கதைகள் சுருக்கமாக முடித்தது பாராட்ட வேண்டிய ஒன்று. படத்தின் நாயகனாக வரும் ஹிரிது ஹரூன் அறிமுக நாயகன் என்று யாருமே சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது இவரின் இயல்பான நடிப்பு. காதலியாக வரும் அனஸ்வரா ராஜன் சில நிமிடங்கள் மட்டுமே வந்து போகிறார்.
சிறைக்கைதிகளாக வரும் சிம்ஹா சிறையில் ஹரிது தப்பிக்க போடும் திட்டத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அங்கிருந்து தப்பிக்க முக்கிய காரணமாக வருகிறார்.
சிறைச்சாலையின் சூப்பிரண்டாக வரும் ஆர்.கே.சுரேஷ் திமிரு பிடிச்ச போலீஸ் அதிகாரியாக மிரட்டியுள்ளார்.
சிறைச்சலையில் பல காட்சிகள் இரவு நேரக்காட்சிகள் வருகிறது. ஒரே செல் அதுவும் ஒரு அறை என்பதால் ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமி லைட்டிங், கேமரா கோணத்தின் மூலம் இரவு நேர காட்சிகளை மிகவும் சிறப்பாக வடிவமைத்துள்ளர். அதே போல சிறைச்சாலைக்குள் நடக்கும் சண்டைக்காட்சிகள் அனைத்தும் சினிமா சண்டை போல இல்லாமல் இயல்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது அதுவும் ரசிக்க வைக்கிறது. பாடல்கள் பெரிதாக ஈர்க்க வில்லை என்றாகும் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் சாம் சி.எஸ்.
Thugs Review By CineTime
சிறைக்குள் இருக்கும் கைதிகள் தப்பிக்க நினைக்கிறார்கள். அதற்காக சிறைக்குள் சுரங்கம் தோண்டுகிறார்கள். அப்படி தோன்றும் போது யாருக்குமே எந்த வித சந்தேகமும் வரவில்லையா என்ற கேள்வி எழாமல் இல்லை அவ்வளவு கொலைக் குற்றவாளிகள் உள்ள சிறைச்சாலை உள்ளே வந்து யாரும் வந்து பார்க்கவில்லையா என்ற சந்தேகம் நமக்கு வராமல் இல்லை.
இப்படி சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் படத்தின் இறுதிக்காட்சிகள் சற்று பரபரப்புடன் கொடுத்துள்ளதால் அவை அனைத்தையும் நம்மை மறக்க வைக்கிறது.
[wp-review id=”45530″]