News
அபர்ணா பாலமுரளிடம் அத்துமீறிய சட்டக்கல்லூரி மாணவன் !

பிரபல மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி தமிழ் சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் என்ற பலம் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சூரரைப்போற்று படத்தில் நடித்து தேசிய விருதையும் பெற்றார்.
இந்த நிலையில் தற்போது வினித் சீனிவாசன் நடித்துள்ள தன்கம் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சஹீத் அராபத் என்பவர் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் விளம்பரத்துக்காக கேரளாவிலுள்ள ஒரு சட்டக்கல்லூரி ஒன்றுக்கு சென்றது படக்குழு. அப்போது மாணவர் ஒருவர் மேடை ஏறி வந்து அபர்ணா பாலமுரளியின் கையை பிடித்து தோல் மேல் கைகளை போட முயன்றார்.
இந்த செயலால் கொஞ்சம் கோபமடைந்த அபர்ணா பாலமுரளி அவனின் அருகிலிருந்து சென்று தன் இருக்கையில் அமர்ந்தார். ஆனாலும் அந்த ரசிகர் மீண்டும் அவரிடம் சென்று நான் உங்களின் தீவிர ரசிகர் என்று கூறி கைகொடுக்க முயன்றபோது அபர்ணா பாலமுரளி கைடுக்க மறுத்து விட்டார்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.