News

அஜித்துடன் நடிப்பதை உறுதி செய்த மஞ்சு வாரியர் !

Published

on

இயக்குநர் வினோத் இயக்கத்தில் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். இது அஜித்தின் 61-வது திரைப்படமாகும். இப்படத்தில் அஜித் குமார் வில்லன் மற்றும் ஹீரோ என இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறாம்.

இப்படத்தில் அஜித்துக்கு 2 ஜோடிகள் என்றும் அதில் ஒரு ஜோடியாக நடிக்க மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் அஜித்துடன் நடிப்பதை மஞ்சுவாரியர் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது நான் அஜித்குமாருடன் இணைந்து நடிப்பது உண்மைதான். படத்தின் அக்தை பிடித்திருந்தது. நம்பிக்கைக்குரிய படம். கதை பெற்றி வேறு எதும் சொல்ல முடியாது என்றார். இப்படத்தில் மஞ்சு வாரியருக்கு நடித்திராத வித்தியாசமான கதாப்பாத்திரம் என்றும் அவருக்கு சண்டை காட்சிகளும் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version