Connect with us
 

Reviews

மார்கழி திங்கள் – விமர்சனம் !

Published

on

Cast: Bharathiraja, Suseenthiran, Shyam Shelvan, Rakshana, Appukutty, George Vijay, Naksha
Production: Suseenthiran
Director: Manoj K Bharathiraja
Screenplay: Sella Sellam
Cinematography: Vanchinathan Murugesan
Editing: Thiyaku
Music: Ilaiyaraaja
Language: Tamil
Runtime: 1 Hrs 52 Mins
Release Date: 27 October 2023

இயக்குநர் பாரதி ராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள மார்கழி திங்கள். பள்ளி காதலையும் அதில் உள்ள ஜாதி கொடுமை பற்றியும் பேசி உள்ளது.

தாய் – தந்தை இறந்து போன பின்னர் தாத்தாவின் அரவணப்பில் வளர்கிறார் படத்தின் நாயகி ரஷனா. பள்ளி படிப்பில் முதல் மாணவியாக இருந்து வருகிறார். அதே பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவன் ஷியாம் செல்வன். இவர்கள் இருவருமே வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். பள்ளி பருவத்தில் இருவருக்கும் காதல் வருகிறது. இதனை தன் தாத்தாவிடம் சொல்கிறார் ரக்ஷனா. அதை கேட்ட பாரதிராஜா கல்லூரி சென்று படித்து முடித்த பின்னர் திருமணம் செய்து வைப்பதாக கூறுகிறார். மூன்று ஆண்டுகள் முடிந்து கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஊருக்கு வருகிறார் ரஷனா. காதலன் ஷியாம் குடும்பமே அந்த ஊரில் இல்லை அவர்கள் எங்கே போனார்கள் என தேட ஆரம்பிக்கிறார் ரக்ஷனா. அவர்களுக்கு என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

புது முகங்கள் ஷியாம் செல்வன், ரஷனா இருவரும் பள்ளி பருவ மாணவ மாணவியாக நடித்திருக்கிறார்கள். இருவரின் நடிப்பும் ரசிக்க வைக்கிறது. ஆனாலும் ஷியாமை விட ரக்ஷனாவுக்கு படத்தின் முக்கியத்துவம் அதிகம். அறிமுக நாயகி போல இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார் ரக்ஷனா.

சமீப காலமாக இது போன்ற தமிழ் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதாவது சாதி எதிர்ப்பு அதற்காக கொலை சண்டை அப்படி அதேதான் இந்த படத்திலும் கையாண்டிருக்கிறார்கள். ஆனால் அதை எல்லாம் தாண்டி இப்படத்தில் அதிர்ச்சி தரக்கூடிய கிளைமாக்ஸ் வைத்து இது மாறு பட்ட திரைப்படம் என நம் மனதில் அழுத்தமாக பதியும்படி சொல்லி இருக்கிறார் இயக்குநர் மனோஜ் பாரதிராஜா !

தாத்தாவாக வரும் பாரதி ராஜா ஒரு வயதான தாத்தா எப்படி இருப்பார் அப்படியே திரையில் வருகிறார். அதாவது வயதானவர்கள் கொஞ்சம் சிந்தித்து சிந்தித்து பேசுவார்கள் அது போல. இயக்குநர் சுசீந்திரன் வில்லனாக சில காட்சிகள் வந்தாலும் மிரட்டி செல்கிறார்.

பள்ளி பருவத்தில் மாணவன் – மாணவி இருவரும் காதல் செய்தால் என்ன ஆகும் தற்கால சமூகம் இதை பார்த்து இளைஞர்கள் சிறுவர் – சிறுமியர் கெட்டு போக மாட்டார்களா என்ற கேள்வி வருகிறது.

Rating 3/5