Connect with us
 

News

மிரட்டும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட லாரன்ஸ் !

Published

on

ராகவா லாரன்ஸ் தற்போது ஆடுகளம் கதிரேஷன் தயாரிக்கும் ருத்ரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத கதிரேசன் வெற்றி மாறன் இணைந்து தயாரிக்கும் துரை செந்தில்குமார் இயக்கும் அதிகாரம் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இதை தவிர இயக்குநர் பி.வாசு இயக்கதில் சந்திரமுகி 2 பாகத்திலும் நடிக்கவிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய படமாக துர்கா என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை லாரன்ஸ் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஶ்ரீ ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார். இப்படதில் நடிக்கும் மற்ற நடிகர் மற்றும் நடிகைகள் தொழிநுட்ப கலைஞர்கள் பெயர்கள் பற்றிய விபரம் அறிவிக்கப்படும்.

துர்கா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை இணையத்தில் வெளியானது. இந்த போஸ்டரை பார்த்தால் கண்டிப்பாக இது ஒரு பேய் பட கதையாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது !