News
சல்மான்கான் விலகல் புதிய நடிகருடன் மாஸ்டர் இந்தி ரீமேக் விரைவில் ஆரம்பம் !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த வருடம் பொங்கள் பண்டிகையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் நாயகியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய்சேதுபதி மற்றும் சாந்தனு, அர்ஜூன்தாஸ், கவுரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மாஸ்டர் படத்தை தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளும் டப்பிங் செய்த்ய் வெளியிட்டனர். அங்கும் படத்துக்கும் நல்ல வரவேற்பை கிடைத்தது. மாஸ்டர் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கினர். இந்தியில் மாஸ்டர் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதும் பணிகள் நடந்து முடிந்துள்ளது.
மாஸ்டர் இந்தி ரீமேக்கில் விஜய் வேடத்தில் சல்மான்கானும் விஜய்சேதுபதியும் கதாபாத்திரத்தில் ஷாகித் கபூரும் நடிக்கருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சல்மான்கான் திடீரென்று விலகியுள்ளார். இதனால் இதனால் இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சல்மான்கானுக்கு பதிலாக வேறு முன்னணி கதாநாயகரிடம் பேசி முடித்திருப்பதாகவும் மாஸ்டர் இந்தி ரீமேக் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.